பட்டறிவு பெற்றவன் வீதியில்!கவிதை மட்டுநகர் கமல்தாஸ்

பட்டறிவற்றவன் பதவியில்
பட்டறிவு பெற்றவன் வீதியில்
படித்தவன் நாட்டை ஆழவேண்டும்
பதறுகின்றோரைக்கண்டு துடித்தழுவேண்டும்
நடித்தழுவோறைக் நகர்த்த வேண்டும்

பட்டம் பெற்றது பட்டினியால் சகவா ?
பாமர மக்களை படிப்பறிவு ஊட்டவா?
பிச்சை எடுத்தேனும்
பட்டம் பெரும் வரை
பாடு பட்ட பெற்றோரின் கடன்களை
எப்போது தீர்ப்பது
சொல்லதாகதவரெல்லாம்
சொகுசு வாகனத்தில் செல்கையில்
சொத்திழந்து, சொகுசிழந்து
பட்டம் பெற்றோம்
பாதையோரமாக தொழிலுரிமை கேட்கின்றோம்
பாராமுகமாய் இருக்கின்றார்கள்
பதவியில் அங்கம் வகிப்பவர்கள்

படிப்பறிவற்றவர்கள் பதவி கேட்கவில்லை
பட்டம்பெற்ற நாம் எமதுரிமையை கேட்டுநிற்கின்றோம்
படித்தவன் பாதையோரங்களில்
தொழிலுரிமை கேட்டு நிற்பது தான் நல்லாட்சியா ?
இல்லை இது சொலாட்சியா ?
பதில் சொல்லையா

நாடு நாடாய் பிச்சையேந்தி
நாட்டிலிருந்த நல்லவர்களை
நாசமாக்க திரிந்தலைந்தவர்கள்
வேலைவாய்ப்பு வழங்க ஏன் இந்த தயக்கம்
போறேன்று பல பேரை அழித்தீர்கள்
நாட்டை சுடுகாடாய் மாற்றி வசந்தம் என்றீர்கள்
இந்நிலை தொடர்ந்தால்
படிக்காதவர்களே நாட்டில் நடமாடக்கூடும்
புலம் பெயர்ந்து பாடம் பயில வேண்டும்
பாடசாலைகளில் பசுக்களை மேய விடுங்கள்
பல்கலைக்கழத்தை பால் பண்ணையாக்குங்கள்
பட்டிக்காரனாவது நாட்டை வளப்படுத்தட்டும்

படித்தோம் பட்டம் பெற்றோம்
படத்தை சுவரில் தொங்க விட்டோம்
என்று பல்லிளித்திருப்பது தான் வேலை என்றால்
இவைகள் எதற்கு இங்கு

படிப்புக்காக படு பட்ட தந்தையை
அமர வைத்து விட்டு
படிப்புக்கு பாடை கட்டிவிட்டு
அவர்கள் பசி தீர்த்திருந்தாலும்
பலன் கிடைத்திருக்கும்

நாம் படிக்க வில்லை
எம் பிள்ளையாவது
பாடு படாமல் வாழ வேண்டுமென
பாடு பட்ட தந்தை ,தமையன் ,
மற்றும் உறவுகளுக்கு என்ன பதிலுரைப்பது

இன்று வேலை கிடைக்கும்
நாளை கிடைக்குமென
இருந்த அபிலாசைகளும்
இறந்து போனது

படித்தல் ஒரு வேலை
படிக்காதவனுக்கு பல வேலையென இருந்த
பழமொழியைகூட பொய்யாக்கி விட்டார்கள்

படித்த எங்கள் மீது குற்றமா ?
படிக்க வைத்த பெற்றோர் மீது குற்றமா ?
படிப்பை போதித்த ஆசன மீது குற்றமா?
நெஞ்சம் பதறுகின்றது
நேர்மை சிதறுகின்றது
வஞ்சம் வளர்கின்றது
வாளெடுக்க துணிகின்றது
துளிகூட பயமறியாமல் போகின்றது

ஏறும் மேடைகளில்
இனவாதமும் ,மதவாதமும் பேசும்
மன நோயாளிகளே
மானங்கெட்ட பதவியை திறந்து விட்டு
வெளியேறு
மனம் உள்ளவர்கள் பதவியில் அமரட்டும்

உரிமையைக் கேட்டு
உறுதியாய் களமாடும்
உறவுகள் வெல்க
உணர்வுகளை உணர்ந்து
உணவுகள் ,உதவிகள்
பகிரும் உன்னதங்கள் வாழ்க

ஆக்கம்: மட்டுநகர் கமல்தாஸ்

0 Kommentare:

Kommentar veröffentlichen